வவுனியா கண்ணாடிக்கணேசபுரம் கிராமத்தில் யானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியும், யானை தாக்கி உயிரிழந்தவருக்கு நீதிகோரியும் அந்தப் பகுதி மக்கள் சடலத்துடன் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சுப்பிரமணியம் (வயது 63) என்பவர் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். அவரின் இறுதிச் சடங்குகள் நேற்று இடம்பெற்றன. இதன்போதே, பொதுமக்கள் சடலத்துடன் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறக்கிய யானைகளை ஏற்றி அனுப்பு, உயிரை பாதுகாக்க வழி சொல், விவசாயத்தைக் காப்பாற்று, அரசே காட்டு யானைகளுக்கு ஒரு வழிசொல் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏந்தியிருந்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.