வவுனியாவில் 2016ஆம் ஆண்டு 291 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார நிலையம் இது வரை திறக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
55 கடைகளைக் கொண்ட இந்தக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனம், கடந்த 2018ஆம் ஆண்டு கட்டிடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ள நிலையில், இதுவரை அதிகாரிகள் திறக்கவில்லை.
இந்நிலைமை காரணமாக வவுனியாவில் உள்ள மொத்த மரக்கறி நிலையம் மற்றும் ஏனைய மொத்த வியாபார நிலையங்கள் வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.
பிரதான சாலையின் ஓரத்தில் மொத்த விற்பனை மையங்களும் இயங்கி வருகின்றன.
கோவிட் தொற்று பரவலின் போது, இந்த வணிக வளாகத்தின் கட்டிடங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பிரிவு நிறுவப்பட்டதுடன் சில நாட்களுக்கு வடக்கிலிருந்து கொழும்புக்கு காய்கறிகளை பரிமாறும் மையமாகவும் கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டன.
எவ்வாறாயினும், தற்போது கட்டிட வளாகம் முற்றிலும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டங்களின் போது, வவுனியா தொழிற்சங்கம் மற்றும் பல அமைப்புக்கள் இந்த விசேட பொருளாதார நிலையத்தை திறந்து வைக்குமாறு கோரிக்கை விடுத்த போதும், கட்டிடத் தொகுதி இது வரை திறக்கப்படவில்லை.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.