வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியிலிருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று காலை குறித்த காணியில் அதன் உரிமையாளர்களால் அபிவிருத்தி பணிகளை செய்வதற்காக ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகழப்பட்டுள்ளது.
இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 450 ரவைகள் தென்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ஆயுதங்களை அகற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் முகாம் ஒன்று இயங்கியதுடன், அதற்கு அண்மித்த பகுதியில் போர் காலத்தில் புளொட் இயக்கத்தின் முகாம் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.