வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதல் ஆண்டு மாணவன் ஒருவரின் திடீர் மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான மாணவனே மேற்படி உயிரழந்துள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி இரவு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவன் பல்கலைக்கழக விடுதியிலிருந்து மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். ஆனால் மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டத்தாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவனின் உடல், பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது மருத்துவமனையில் மடப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மரணத்திற்கான காரணம், பிரேத பரிசோதனைக்கு பின்னர் விசாரணையில் வெளிப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூவரசன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.