பூநகரியில் திங்கட்கிழமை இடம்பெற்ற வான் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். காயமடைந்த நபருக்கு மேலதிக சிகிச்சை வழங்கும் நோக்கில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது நிலைமை தீவிரமாக மாற்றமடைந்ததால், உடனடியாக மாரவில மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விபத்து தொடர்பில் வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.