ஒருவர் காயம்!
(புதியவன்)
மட்டக்களப்பு வீதி தளங்குடா பிரதேசத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ். சிவமோகன் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ். சிவமோகன் உள்ளிட்ட மூவர் இன்று அதிகாலை பொத்துவில் அறுகம்பையில் இருந்து வவுனியா நோக்கி வாகனத்தில் பயணித்த வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.