விஜய் படங்கள் என்றாலே வசூல் ரீதியாக பெரிய சாதனைகளை படைப்பது வழக்கமான ஒன்று. அப்படி தான் தற்போது GOAT படம் வசூல் ரீதியாக சைலண்டாக சம்பவம் செய்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும். வெளியான நாளில் இருந்து தற்போது வரை மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமூக வலைத்தளங்களில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் திரையரங்குகளுக்கு, மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு படம் மக்களை கவர்ந்துள்ளது. இதன் காரணமாக, படத்தின் வசூலும் அதிகரித்துகொண்டே சில படங்களுடைய சாதனையையும் முறியடித்து வருகிறது.
அந்த வகையில், படம் வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, GOAT படம் மொத்தமாக வெளியான 7 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த, முதல் திரைப்படம் என்ற சாதனையையும் GOAT படைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, GOAT படம் 400 கோடி வசூல் செய்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் 2 (350) கோடி வசூல் சாதனையை முறியடித்து தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த 6-வது படம் என்ற சாதனையும் படைத்துள்ளது. மேலும், 350 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த GOAT திரைப்படம் ஒரு வாரத்தில் 400 கோடி வசூல் செய்து செலவு செய்த பட்ஜெட்டையும் மீட்டுள்ளது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.