மிருகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகர் ஆதி. இவர் தெலுங்கு இயக்குநர் ரவிராஜா பினிசெட்டியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.
ஆதி – நிக்கி கல்ராணி இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அண்மையில் இருவரும் பிரியப் போவதாக இணையத்தில் வதந்திகள் பரவின. இந்த பொய்யான வதந்திகள் தன்னை வேதனையடையச் செய்தது எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், “நாங்கள் காதலர்களாக மாறுவதற்கு முன்பும் தற்போது கணவன் மனைவியாக மாறிய பிறகும்கூட நல்ல நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் இதயங்களால் ஒன்றுபட்டுள்ளோம். இந்நிலையில் இதபோன்ற வதந்திகள் பரவியது ஆச்சரியமாக இருந்தது. அத்துடன் மிகவும் வேதனையளித்தது. சமூக வலைத்தளங்களில் ஆதாயம் தேடுவதற்காக இவ்வாறு தவறான செய்திகளை பரப்புகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.