ஊர்காவற்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தினால் வேலனை கல்வி கோட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தரம் 5 மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரண பொதி வழங்கல் நிகழ்வு வேலணை மத்திய கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை(20) மதியம் இடம்பெற்றது .
இதன்பொழுது 100 மாணவர்களுக்குரிய புத்தகபை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இதேவேளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, ஜெபிஎஸ் ஜெயமகா , ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவராகள் என பலரும் கலந்து கொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.