காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்தியப் பிரஜைகளுக்கு கனேடிய நீதிமன்றம் பிணை வழங்கியது.
கரன் பிரார், அமந்தீப் சிங், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் ஆகிய நான்கு இந்தியர்களுகம் முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
வழக்கு மீதான விசாரணை சர்ரே மாகாண நீதிமன்றிடமிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
அதேநேரம், அடுத்த விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 11 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.
ஹர்தீப் நிஜ்ஜார், ஒரு முக்கிய காலிஸ்தான் சார்பு தலைவர், 2023 ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை அடுத்து இந்த வழக்கு உலக அளவில் கவனம் பெற்றது.
இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது, அவை “ஆதாரமற்றவை” என்றும் கூறியது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.