ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் புதன்கிழமை மாலை ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் சிறப்பு காட்சியை பார்க்கச் செனற் 35 வயதுடைய பெண்ணொருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது ஒன்பது வயதுடைய மகன் பலத்த காயமடைந்துள்ளதாக ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படத்தின் சிறப்பு காட்சிக்கா வருகை தந்திருந்த தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனைப் பார்க்க ஏராளமான மக்கள் கூட்டம் அலை மோதியமையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திரையிடலுக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் வந்திருந்த நடிகரைக் காண ரசிகர்கள் குவிந்ததால் திரையரங்குக்கு வெளியே பரபரப்பு ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒருகட்டத்தில் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போன நிலையில், பொலிஸார் லத்தி அடி தாக்குதல் நடத்தியதால் பயங்கர நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அத்துடன் அவரது மகன் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகம் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.