‘காதலிக்க நேரமில்லை’ கண நேரக் கண்ணோட்டம்!!
‘காதலிக்க நேரமில்லை’ கண நேரக் கண்ணோட்டம்!!

[புதியவன்]

இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் தற்போது நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்கி வரும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்து வருகிறார். தி.ஜா. பானு, யோகி பாபு, லால், வினய் ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. ஏற்கனவே, ரொமாண்டிக்கான முதல் பார்வை சுவரொட்டி கூட கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து, படத்துக்கான சிறிய கண நேரக் கண்ணோட்டக் (Kadhalikka Neramillai) காணொலியை படக்குழு வெளியிட்டுள்ளனர். காணொலியில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நித்யாமேனன் இருவரும் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு இருப்பது போல காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வரும் இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனமான டி-சீரிஸ் தமிழ் வாங்கியுள்ளதாகவும், கண நேரக் கண்ணோட்டக் காணொலி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வரும் இசை படத்தின் மீதும், படத்தில் இடம்பெறும் பாடல்கள் மீதும் இருக்கும் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. விரைவில் படம் எப்போது வெளியாகும் என்பதற்கான வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. [எ]

157 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.