நடிகர் ஜெயம் ரவி, தொலைக்காட்சி தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை கடந்த 2009-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்து கொண்டதாக கிசு கிசு வந்த நிலையில், ஜெயம் ரவியே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.
ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. என தன்னுடைய மனைவியை பிரிவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழ் சினிமாவில் பரப்ரபை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சூழலில், ஜெயம் ரவி தன்னிடம் கேட்காமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆர்த்தி குற்றச்சாட்டை முன் வைத்து அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். அதில் ” சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன்.
இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல எனக் கூறியுள்ளார்.
என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம் எனவும் வேதனையுடன் அந்த அறிக்கையில் ஆர்த்தி கூறியிருக்கிறார். ஜெயம் ரவி தன்னுடைய மனைவியிடம் பேசாமலே விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.