பெரமுனவின் வேட்பாளர் கேள்வி
தமிழரசுக் கட்சியினர் 'பார் பெர்மிட்' பெற்றதாக மக்கள் கூறுகின்றனர். இது அந்தக் கட்சிக்கே களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைப் போக்குவதற்கு சத்தியக் கடதாசியை வழங்கி சுமந்திரன் முன்மாதிரியாக செயற்பட வேண்டும். இவ்வாறு பொதுஐன பெரமுன கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
'பார் பெர்மிட்' யாருக்கும் இதுவரையில் பெற்றுக் கொடுக்கவில்லை என சத்தியக் கடதாசியை அண்மையில் நான் கொடுத்திருந்தேன். அதேபோல யாழ். மாவட்டத்தில் என்னுடைய சக வேட்பாளர்கள் இதில் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய சத்திய கடதாசியை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.
ஆனாலும் இதுவரைக்கும் எவரும் அப்படியாக சத்திய கடதாசியை கொடுத்ததாகக் காணவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 'பார் பெர்மிட்' உண்மை தெரிய வேண்டுமென ஐனாதிபதியிடமும் சென்று கதைத்திருந்தார். அப்படியானால், அவரும் ஒரு சத்தியக் கடதாசியை வெளிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் தன்னைப் போன்று தன் கட்சி உறுப்பினர்களையும் அவர் ஊக்கப்படுத்த வேண்டும். ஆகவே, இதை ஒரு முன்மாதிரிகை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என சுமந்திரனிடம் கோருகின்றேன் - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.