'குடும்ப வன்முறைகளை ஒழிக்க வருகிறது புதிய சட்டம்'
'குடும்ப வன்முறைகளை ஒழிக்க வருகிறது புதிய சட்டம்'

புதியவன்

தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டவரைவு ஒன்றை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

அதேநேரம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டவரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரச தலைவர் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

'பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டவரைவுக்கு 04.03.2024 ஆம் திகதி  அனுமதி கிடைத்திருந்ததோடு, அமைச்சரவை அனுமதி 03.07.2024 ஆம் திகதி அரசிதழில் வெளியிடப்பட்டது. 

அதனை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதோடு, தேசிய மகளிர் ஆணைக்குழு அமைப்பதற்கான நியதிகளும் அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமும் 20.03.2024 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டவரைவு தொடர்பான கலந்துரையாடலை நடத்தியிருந்தது. அரச தலைவர் அலுவலகம், சட்டமா அதிபர் பணிமனை, சட்ட வரைஞர் பணிமனை உள்ளிட்ட தரப்பினரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டவரைவு தொடர்பில் உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புக்கள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

ஒரு வாரத்துக்குள் அந்த அவதானிப்புக்களை பரிசீலிக்க இலங்கையின் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதில் திருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் அரசிதழ் அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் சார்பில் அவருக்கு நெருக்கமான ஒருவர் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

நடைமுறையிலிருக்கும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் துர்நடத்தைகளுக்குள்ளான பெண்களுக்கு 11 தற்காலிக தடுப்பு நிலையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பாலின சமத்துவச் சட்டமூலத்துக்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதோடு, அரசிதழில் அறிவிப்பதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

மேலும், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கான தேசிய வழிகாட்டுதல்களுக்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.' என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.(க)

65 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.