ஆத்மத்தில் இருத்தி...
ஆத்மத்தில் இருத்தி...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல், அஞ்சலி நிகழ்வுகள் என தமிழர் தாயகத்தை சோகத்தின் கீதங்கள் கௌவத் தொடங்கியிருக்கின்றன. தமிழர் இதயத்துடன் இரண்டறக் கலந்துவிட்ன ஆத்மார்த்தமானதும் மிகக்கனதியானதுமான நான்களில் தவிர்க்கமுடியாத காலங்கள் இவை. 15 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய நாளில்தான் முள்ளிவாய்க்கால், குருதிச் சகதிக்குள் சின்னாபின்னமானது. தன் சொந்தநாட்டு மக்களையே லட்சக் கணக்கில் கொன்றொழித்த உலகின் மோசமான இழிசெயல் நிகழ்ந்து இன்றுடன் ஆண்டு 15.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலிப்பு நிகழ்வுகளை வழக்கம்போல், உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பதற்கு அத்தனை ஏற்பாடுகளும் உரிய கட்டமைப்புகள் ஊடாக ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், அஞ்சலிப்புகளையும் முள்ளிவாய்க்கால் நினைவுகளையும் சமூகமயப்படுத்த வேண்டிய, அடுத்த சந்ததிக்கு ஊடுகடத்தவேண்டிய பெரும் பொறுப்பு ஒவ்வொரு தமிழ்த் தேசியக் கட்சிக்கும், சமூகக் குழுக்களுக்கும், சிவில், சமூகச் செயற்பாட்டுத் தளங்களுக்கும் இருக்கவே செய்கின்றது. இந்த அஞ்சலி நிகழ்வுகள், கிராமங்கள்தோறும் எவ்வளவுக்கு எவ்வளவு விரிவாக்கப்படுகின்றதோ அது அவ்வளவுக்கவ்வளவு நீதிக்கான பாதையை அகலத் திறக்கும். ஆதலால், இந்த வாரத்துக்குரிய தாற்பரியத்தை உணர்ந்து ஆத்மத்தில் இருத்தி செயற்பட வேண்டியது எம் அனைவரினதும் தேசியக் கடமையாகும். அத்துடன், நம்பிக்கையற்ற யாசகனைப் போன்று ஒவ்வொருவருடமும் 'நீதியை மன்றாட்டமாகத் தேடும்' இனக் குழுமமாகத்தான் இந்த அஞ்சலிப்புகளை நாம் மேற்கொள்ளப்போகின் றோமா? என்ற கேள்வியும் இங்கெழுவது தவிர்க்கப் பட முடியாததாகின்றது.

இலங்கையில் இறுதிப்போரின்போது தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழர்கள் மீதுவகைதொகையின்றி போர்க்குற்றங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன என்று வெளிப்படையாக ஏற்றிருந்தது 'உலக அரசாங்கம்' என்று தன்னை வரைவிலக்கணப்படுத்தியுள்ள ஐ.நா. ஆனால், தமிழர்கள் மீதான இந்தப்படுகொலைகளுக்கு என்ன நீதியை ஐ.நா. வழங்கிவிட்டது? ஒரு தசாப்தம் கடந்த பின்னரும்கூட நீதியை நிலைநாட்டி ஆறாத ரணத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர் கனின் காயங்களுக்கு கொஞ்சமேனும் மருந்திடு வதற்கு என்ன பொறிமுறைகளை ஐ.நா. உருவாக்கியுள்ளது? இறுதிப்போரின்போது காணாமலாக்கப் பட்ட உறவுகளைத் தேடுவதைப்போன்று இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் தமிழினம் தேடித் தேடிக் களைத்துப்போய்விட்டது.

இலங்கையில் இறுதிப்போரின்போது தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழர்கள் மீதுவகைதொகையின்றி போர்க்குற்றங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன என்று வெளிப்படையாக ஏற்றிருந்தது 'உலக அரசாங்கம்' என்று தன்னை வரைவிலக்கணப்படுத்தியுள்ள ஐ.நா. ஆனால், தமிழர்கள் மீதான இந்தப்படுகொலைகளுக்கு என்ன நீதியை ஐ.நா. வழங்கிவிட்டது? ஒரு தசாப்தம் கடந்த பின்னரும்கூட நீதியை நிலைநாட்டி ஆறாத ரணத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் காயங்களுக்கு கொஞ்சமேனும் மருந்திடுவதற்கு என்ன பொறிமுறைகளை ஐ.நா. உருவாக்கி யுள்ளது? இறுதிப்போரின்போது காணாமலாக்கப் பட்ட உறவுகளைத் தேடுவதைப்போன்று இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் தமிழினம் தேடித் தேடிக் களைத்துப்போய்விட்டது.

'உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற விடயங்களுக்கான நீதிப்பொறிமுறையை அரசாங்கமே வகுக்கும்' என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்த கருத்தின் பின்புலத்தைக் கூட ஐ.நா. வழங்கிய அளவுகடந்த காலஅவகாசங்களின் நீட்சியாகவே கொள்ளவேண்டியிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் இவ்வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன் அவர், முள்ளி வாய்க்கால் முற்றத்தில் இடம்பெறவுள்ள பொதுநினை வேந்தலிலும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச மன்னிப்புச்சபை என்பது ஒரு சிறு அமைப்பல்ல, அதுவொரு 'உலகஸ்தாபனம்': ஆதலால், அக்னெஸிடம் சில விடயங்களை தம் சொல்லாலும் செயலாலும் ஊடுகடத்த வேண்டிய காலக்கடமை தமிழர் தரப்புக்கு இருக்கவே செய்கின்றது...!

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

308 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.