(மாதவன்)
சட்டவிரோத தொழில் முறைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில் வடமராட்சி மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த நான்கு நபர்கள் இரண்டு படகுகளுடன் நேற்று புதன் கிழமை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட நால்வரும் கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.