யாழ் போதனா மருத்துவமனையின் முன்புறமாக உள்ள "மருத்துவமனை வீதியில்" மரநடுகை திட்டம்.
(இனியபாரதி)
யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியானது பொதுமக்களின் அதிக பாவனையில் உள்ள சன நெரிசலான பகுதியாகும். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவ் வீதியூடாக பயணிக்கின்றனர். அதிகரித்த வெப்பம் மற்றும் பல புறக் காரணிகளால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
இந்நிலையில் யாழ் போதனா மருத்துவமனை, யாழ் மாநகர சபை, மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து மருத்துவமனை வீதியின் நடுப்பகுதியில் பொருத்தமான குழிகளை வெட்டி நிழல் தரும் மரங்கள் நாட்டினர். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.