பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணைய நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்பயிற்சி கௌரவிப்பு விழா மன்னாரில் கொக்கஸ் கார்டன் ஹொட்டலில் மன்னார் இணைய நிறுவனத்தின் இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன் தலைமையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொழிற்பயிற்சியானது காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தொழிற் பயிற்சி பெற்ற பத்து யுவதிகள் கௌரவிக்கப்பட்டு அவர்களின் தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் பெண்களை குழுவாக அமைத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகள் செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானத்தை வங்கி கணக்கில் இடப்பட்டு வங்கி கணக்குப் புத்தகம் வழங்கப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றது.
6i1l7n
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.