சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி மற்றும் பொதுக்கூட்டம் வேர்ள்ட் விசன் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் சங்கானையில் இன்று இடம்பெற்றது.
இந்த நடைபவனியானது சங்கானை பிரதேச கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகி வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தில் நிறைவுற்று பிரதேச செயலகம் முன்பாக பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர், தொண்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.