(ஆதவன்)
அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு வெவ்வேறான சந்தர்ப்பங்களில் உதவிகளை வழங்கிய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வரி நிவாரணங்களுக்காக 978 பில்லியன் ரூபா குறிப்பிட்ட சில வருடங்களுக்குள் இழக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்யும் நிறுவனம் ஒன்றின் publicfinance.lk என்ற இணையத்தளத்தில் இத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு இழக்கப்பட்டுள்ள வரி வருவாயின் அளவு, கடந்த 2022ஆம் ஆண்டில் அரசாங்கத்துக்கு சேர்க்கப்பட்ட வரி வருவாயில் 56 வீதமாகும்.
2024ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 31ஆம் திகதி இலங்கையின் நிதி அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட வரிச் செலவுகள் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை வழங்கியுள்ள வெவ்வேறான வரி நிவாரணங்களால் அரசாங்கம் இழந்துள்ள வருவாயை இந்த அறிக்கை மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.