கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று(05) அதிகாலை 12 மணியளவில் கனகராயன் குளத்திற்கும் மாங்குளத்திற்கும் இடையில் 212வது கல்லு பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தையடுத்து டிப்பர் வாகனம் அங்கிருந்து சென்ற நிலையில் பொதுமக்கள் உதவியுடன் ஹயஸ் வாகனத்திலிருந்த 7 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
nqf7it
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.