றொமால் புயல் மத்திய கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டு வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று நள்ளிரவு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த மேற்கு வங்காள விரிகுடா கடற்கரையை கடக்கக்கூடும். கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் பணிமனை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியன தெரிவித்துள்ளது
இதேவேளை இலங்கையைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் நிலவும் கடும் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பிரதேசங்களிலுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.