நடிகர் அஜித்தும் அவரது மனைவியும் தனது வீட்டு வாசலில் நீண்ட நேரம் காத்திருந்ததாக தாணு தெரிவித்துள்ளார்.
இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்தை தயாரிக்கவுள்ளார். முன்னதாக இவர் தயாரித்த அசுரன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர் அஜித் குறித்த கூறிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 'எனது மனைவி சிங்கப்பூரில் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்கு நீண்ட நேரம் ஆனது.
அந்த சமயத்தில் எனது வீட்டுக்கு வந்த அஜித்தும், ஷாலினியும் வாசலிலேயே இரண்டரை மணி நேரம் காத்திருந்தார்கள் என உருக்கமாக கூறியுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.