திஸ்ஸமஹாராம பகுதியில் வீடொன்றை உடைத்து, 11 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் உடமைகள் திருடப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று திஸ்ஸமஹாராம, ரப்பர்வத்தையைச் சேர்ந்த 88 வயதுடைய மூதாட்டி ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது இரண்டு மகள்கள் துபாய் நாட்டிலும், ஒரு மகன் கனடாவிலும் வசிப்பதாகவும், அவர்கள் அவ்வப்போது தனக்கு அன்பளிப்பாக வழங்கிய, 11 கோடியே 49 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் (114,922,000) பெறுமதியான தங்க நகைகளை வீட்டில் உள்ள சில அலுமாரிகளில் துணிகளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததாகவும், திருடப்பட்ட தங்க நகைகள் 300 பவுன்ஸுக்கும் அதிகமானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சமையலறைக்கு அருகிலிருந்த 3,250 கிலோ கிராம் நிறையுடைய 50 மூடை நெல், வீட்டிலிருந்த பல மின் உபகரணங்கள், ஒரு சலவை இயந்திரம் ஆகியனவும் திருடப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.