பெண்களிடம் அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனை
பெண்களிடம் அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனை

பெண்களிடம் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார். பெரும்பாலான பெண்கள் அழகு கலை நிலையங்களின் ஊடாக போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களிடம் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்று குளியாபிட்டியவில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர், அதிகளவான பெண்களிடம் தற்போது ஐஸ் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குருநாகல் மாவட்டத்திலேயே இந்த உயர்வு பதிவாகியுள்ளது. ஆண்களை விடவும் பெண்களுக்கே பாதிப்பு அதிகமாகவுள்ளது. அழகு கலை நிலையங்களின் ஊடாக இந்த பழக்கத்திற்கு பெண்கள் அடிமையாகின்றனர்.

அடிக்கடி அழகு கலை நிலையங்களுக்கு செல்லும் தங்களது பிள்ளைகள் குறித்து பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

இவ்வாறு, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.

#vijay

421 3

3 Comments

Javaneesan 16-Dec-2022

It's ok

Larkin 21-Nov-2022

dfg

Shanthan 21-Nov-2022

dfg

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.