புகைப்படத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்!!
புகைப்படத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்!!

 

தமிழ் சினிமாவில் அவ்வளவு எளிதில் அஜித்தின் 50-வது படமான மங்காத்தா படத்தை யாரும் மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருந்தார். அர்ஜுன், ராய் லட்சுமி, பிரேம்கி, வைபவ், மஹந்த் ராகவேந்திரா, அஞ்சலி, ஆண்ட்ரே, அஷ்வின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.

படம் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான நிலையில், வருடங்கள் கடந்தும் பலருடைய பேவரைட் படமாக இருக்கிறது. பலருடைய எதிர்பார்ப்பு இந்த படத்தின் 2-வது பாகம் உருவாகுமா என்று தான். அதற்கு கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது என்பது போல ஒரு புகைப்படம் தான் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

மங்காத்தா படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து கோட் படத்தினை இயக்கி வருகிறார். அதே சமயம் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பாஜன் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், அஜித், த்ரிஷா மற்றும் விடாமுயற்சி படக்குழுவினரை வெங்கட் பிரபு சந்தித்துள்ளார்.

ஏற்கனவே, இவர்களுடைய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், தற்போது ஒரு புகைப்படத்தை த்ரிஷா வெளியீட்டு இருக்கிறார். புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஒரு வேளை மங்காத்தா 2 படமாக இருக்குமோ? எனவும் அல்லது கோட் படத்தில் த்ரிஷா கேமியோ கதாபாத்திரமோ என குழப்பத்துடன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். [எ]

282 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.