13 ஆவது திருத்தம்; அப்பன் சொத்தல்ல!
13 ஆவது திருத்தம்; அப்பன் சொத்தல்ல!

சஜித்துக்கு பொன்சேகா மறைமுகமாகப் பதிலடி

(ஆதவன்)

நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காகவே படையினர் உயிர்த் தியாகம் செய்தனர். எனவே, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று கூறும் அரசதலைவர் வேட்பாளருக்கு வடக்கு மற்றும் தெற்கு மக்கள் வாக்களிக்கக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


அத்துடன், பெயர் குறிப்பிடாது மறை முகமாக சஜித் பிரேமதாஸ மீது சரமாரியாக அவர் சபையில் சொற்கணைகளைத் தொடுத்தார். 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது அப்பன் வீட்டுச் சொத்து அல்ல எனவும் சாடினார்.


நாடாளுமன்றத்தில் பொன்சேகா நேற்று மேலும் தெரிவித்ததாவது:- 
நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு எதிரணிப் தலைமைக் கொறடாவிடம் நேரம் கோரியிருந்தேன். எனக்கு நேரம் ஒதுக்கவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் பதிலளித்தார். அத்துடன், அரசதலைவர் தேர்தலின் போது சஜித்துக்கு சார்பாக வேலை செய்வீர்களா எனவும் வினவினார். இறுதியில் எனக்கு நேரம் வழங்கவில்லை. எனினும், ஆளுங்கட்சியிடம் பேசி நேரத்தைப் பெற்றுக்கொண்டேன்.

நாம் மக்களுக்கு சாராயம் கொடுத்து அர சியல் நடத்துவதில்லை. ஊழல், மோசடி களில் ஈடுபடுவதும் கிடையாது. கொழும்பில் உள்ள கசினோக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பாடசாலைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் பொருள்களை வழங்குவதும் கிடையாது. இப்படிச் செய்பவர்கள்தான் நாட்டின் தலைவராகப் பார்க்கின்றனர். கட்சித் தலைவர் என்பதற்காக ஆட்சி அதிகாரத்தை வழங்கும் முடிவை எடுத்தால் அது நாட்டுக்கே பாதகமாக அமையும்.
தந்தை அரசதலைவராக இருந்தார் என்பதற்காக சிலரை அராசதலைவராக்க முடியாது. இது தொடர்பில் மக்கள் சிந்தனையுடன் செயற்படவேண்டும். பொருள் களைப் பகிர்பவர்களைவிடவும் சிறந்த தலைவரையே மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்.

அரசதலைவர் ஆகவேண்டும் என்ற கனவில் இருப்பவர்கள், வடக்குக்குச் செல்கின்றனர். 13 வழங்கப்படும் என உறுதியளிக்கின்றனர். தெற்கில் யார் எதிர்த்தாலும் 13 வழங்கப்படுமாம். அப்படி வழங்குவதற்கு 13 என்ன அப்பா வீட்டுச் சொத்தா? நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காகவே படையினர் உயிர்த் தியாகம் செய்தனர். எனவே, வடக்கும், தெற்கும் என அனைத்துப் பகுதியிலும் உள்ள மக்கள் ஐக்கியமாக வாழவேண்டும். தெற்கில் உள்ளவர்கள் வடக்கில் உள்ள வாக்குகளுக்காக இங்கிருந்து சென்று உறுதியளிக்கின்றனர். வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள், இதைப் பெற்றுக்கொடுப்போம் எனக் கூறி நாடாளுமன்றம் வருகின்றனர். 13 இனை வழங்குவோம் என வாக்குக் கேட்கும் நபர்களுக்கு தெற்கு மக்களும், வடக்கு மக்களும் வாக்களிக்கக்கூடாது"- என்றார். (ச)

#colombo_news

161 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.