தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்தைய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு வழிவகுக்கும். மலச்சிக்கலை குணமாக்கும் சில வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
1.தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
2.சுடுதண்ணீரில் சிறிது விளக்கெண்ணெய், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு கலந்து ஒரு டம்ளர் தண்ணீர்
சேர்த்து குடிக்க மலசிக்கல் தீரும்.
3.கடுக்காய் பொடியை ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் சரியாகும்.
4.தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும்.
5.நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய நிலவாகை பொடியை ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடிக்க மலசிக்கல் தீரும்.இதை இரவு உணவு உண்ட அரைமணி நேரம் கழித்த பிறகு குடிக்க வேண்டும்.
6.சிறிது சூடான தண்ணீர் காலை எழுந்தவுடன் குடிக்க மலம் உடனடியாக வெளியேறும்.
7.இரவில் மாதுளை சாப்பிட்டு தூங்க காலையில் மலம் வெளியேறும். சூரத்தவரை, நிலவாகை, கடுக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து சிறிது வெந்நீரில் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
8.உலர்திராட்சியை 30 கிராம் எடுத்து 200 மில்லி நீரில் மாலை நேரம் ஊறவைத்து இரவுத்தூங்க போகும் போது நீருடன் சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
9.பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் பிரச்னை தீரும்
10.தினமும் மதிய உணவில் கீரைவகைகளை சேர்த்துவந்தால் மலசிக்கல் பிரச்னை வராது.
11.செவ்வாழை பழம் மலச்சிக்கலை போக்கவல்லது தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
12.இஞ்சி மலச்சிக்கலை குணமாக்கும் தன்மை கொண்டது. உணவுகளில் இஞ்சி சேர்த்து வரலாம். மேலும் இஞ்சி கூட்டு செய்து சாப்பிட்டு வர மலசிக்கல் பிரச்னை தீரும்
13.வெள்ளரிக்காய் மலச்சிக்கலை தீர்க்கும் தன்மை கொண்டது. தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட மலச்சிக்கல் வராது.
14.நெல்லிக்காய் மலச்சிக்கலை குணமாகும் தன்மை கொண்டது. நெல்லிக்காயை ஜூஸாக செய்து குடிக்க வேண்டும். ஐஸ்,உப்பு போடக்கூடாது.
15.மலச்சிக்கல் தொடர்ந்து இருந்தால் அசைவ உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
16.காலையில் காபி, டீயை குடிக்க கூடாது. பல் துலக்கியவுடன் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
17.பன்னீர் ரோஜா இதழ்கள்,கற்கண்டு சேர்த்து நன்றாக இடித்து அதை இரண்டு நாள் அப்படியே வைத்திருந்து பிறகு தேன் சேர்த்து அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்திருந்து இரவு உணவிற்கு பின்னர் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு அதன் பிறகு சுடுநீர் குடிக்க வேண்டும்.
18.குல்கந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.