கா.பொ.த உயர்தர 2022 ஆம் ஆண்டிற்கான உயிரியல் தொழில்நுட்ப செயன்முறைப் பரீட்சைகள் இந்த மாதம் 5,6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடைபெறும் என ரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 77 பரீட்சை மையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளது. எழுத்து பரீட்சைக்கு தோற்றாத மாணவர்கள் செயன்முறை பரீட்சையில் பங்கேற்க முடியாது. பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகளின் சேர்க்கைப் படிவம் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் சேர்க்கை படிவம் விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. www.doenets.lk இணைய தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பாடசாலை மூலமான விண்ணப்பதாரர் கல்வி கற்கும் பாடசாலை அதிபர் ஊடாக பாடசாலையின் பயனாளர் பெயர் மற்றும் பெயருடன் அனுமதிப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இது தொடர்பில் தகவல்கள் தேவைப்படின் 1911, 0112784208, 0112784537, 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.