பிரபல வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா ஒன்லைன் மோசடியில் சிக்கி இலட்சக்கணக்கான பணத்தினை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலேகா மித்ராவுக்கு அறிமுகம் இல்லாத ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் கூறிய செயலியை தனது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து இலட்சக்கணக்கில் பணத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
பிறரும் இதன் மூலம் பாதிப்படையக்கூடாது என்பதற்காக தனக்கு ஏற்பட்ட மோசமான சூழ்நிலையை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவர் வங்க மொழியில் 60-க்கும் மேற்பட்ட படங்களிலும் இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.