இந்தோனேசியாவில் 41 வயதான பெண், 16 வயதுடைய சிறுவவனைத் திருமணம் செய்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த சிறுவனின் தயாருடன் கடந்த சில ஆண்டுகளாக குறித்த பெண் நெருக்கமான தோழியாக இருந்து வந்துள்ளார். இதனால் சிறுவயதிலிருந்தே குறித்த சிறுவனுடன் பழகி வந்துள்ளார்.
இருவரின் வீடுகளும் அருகருகில் அமைந்து இருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.
இந்நிலையில் தன்னுடைய காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக தன்னை விட 25 வயது குறைவான சிறுவன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் நிறைய சொத்துக்கள் இருப்பதால் சிறுவனின் தாயாரும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார், அத்துடன் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
சிறுவனின் முழு சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்று இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவை பொறுத்தவரை 19 வயதில் ஆணும் பெண்ணும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம்.
அதே சமயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்தோனேசியாவில் 21 வயது நிறைவடையும் போது பெற்றோரின் சம்மதம் இல்லாமலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆனால் கெவினுக்கு 16 வயதே நிறைவடைந்து இருப்பதால் குறித்த பெண் மீது மைனர் சிறுவனை திருமணம் செய்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சிறுவனின் தாயாரை தற்போது விவாகரத்து செய்து விடுமாறு அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.