ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மீளாய்வு கலந்துரையாடல்கள் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன.
இந்த மீளாய்வு கலந்துரையாடல் தொடரில் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணையை பாதுகாப்பது மற்றும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரிப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் சுமார் 2 வாரங்களாக இடம்பெற்று வந்த இந்த கலந்துரையாடல் தொடரின் இறுதிக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலின் பின் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.