பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே செல்கின்றது. இதுவே ரசிகர்கள் இந்த சீசனை ஆர்வமாக பார்க்க ஒரு காரணமாக அமைந்தது.
இந்நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே சக போட்டியாளரான விஷ்ணு ஜோவிகாவை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.
உனக்கு முதலில் மற்றவர்களிடம் எப்படி பேசவேண்டும் என தெரிகின்றதா ? அவன் இவன், வாடா போடா என பேசுற. இதே நாங்க வாடி போடி என பேசினால் நீ சும்மா விடுவியா ? எங்களை மட்டும் லிமிட்டுடன் நடந்துக்க சொல்லுற, உனக்கு லிமிட் இல்லையா ?. நாங்க என்ன உன் வீட்டு வேலைக்காரங்களா ? இடம் பொருள் ஏவல் தெரிந்து பேசு என ஜோவிகாவை விஷ்ணு சரமாரியாக வெளுத்தி வாங்கினார்.
இதைத்தொடர்ந்து ஜோவிகா என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாகிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர், விஷ்ணு சரியாதான் கேள்வி கேட்குறாரு என அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.