மிக விரைவிலேயே கண்டறியக் கூடிய புற்றுநோய்களில் ஒன்று மலக்குடல் புற்றுநோய். சில நேரங்களில் இதை பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கிறார்கள். இதைக் கண்காணிப்பதற்கு மிகவும் அடிப்படையானது மலத்தை பரிசோதிப்பதுதான் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மலக்குடல் புற்றுநோயைக் எப்படிக் கண்டறியலாம்?மூன்று முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது:
எந்தக் காரணமும் இல்லாமல் உங்கள் மலத்தில் ரத்தம் காணப்படும்போது - அது தெளிவான சிவப்பு நிறத்திலோ அல்லது கருஞ்சிவப்பு நிறத்திலோ இருக்கிறதா?
மலம் கழிப்பதில் மாற்றம் - அடிக்கடி மலச்சிக்கல், அடிக்கடி கழிவறைக்கு செல்லும் நிலையில் இருக்கிறீர்களா அல்லது நீங்கள் கழிக்கும் மலம் தண்ணீராகப் போகிறதா அல்லது கெட்டியாக வெளியேறுகிறதா?
உங்கள் அடிவயிற்றில் வலிப்பது போன்ற உணர்வு இருக்கிறதா அல்லது வீக்கமாக இருக்கிறதா, உங்கள் வயிறு முழுமையாக மற்றும் இறுக்கமாக இருப்பது போல உணர்கிறீர்களா?
இது போலவே மேலும் சில அறிகுறிகளும் கூட இருக்கலாம்
1.உங்கள் உடல் எடை திடீரெனக் குறைவது
2.மலம் கழித்த பிறகும் மலக்குடல் முழுமையாகக் காலியாகவில்லை என்பது போன்று உணர்வீர்கள்.
3.சோர்வாக அல்லது வழக்கத்துக்கு மாறான மயக்கமாக நீங்கள் உணர்வீர்கள்
இந்த அறிகுறிகளை நீங்கள் கொண்டிருந்தால், மலக்குடல் புற்றுநோய்தான் வந்துவிட்டது என்று நீங்கள் கருதத் தேவையில்லை. ஆனால், இவை எல்லாம் மூன்று வாரங்களுக்கு அல்லது நீண்ட நாட்களுக்கு தொடர்கிறது என்று நீங்கள் அறிந்தால், ஏதோ சரியில்லை என்று நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
புற்றுநோய் ஆபத்தை காற்று மாசு அதிகரிக்குமா? - அறிவியல் விதிகளை மாற்றும் ஆய்வு முடிவு
HPV தடுப்பு மருந்து கருப்பைவாய் புற்றுநோயை 90% குறைக்கிறது: ஆய்வில் தகவல்
அவற்றை விரைவாக சரிபார்க்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். ஆரம்பகட்ட பரிசோதனையின்போதே புற்றுநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவற்றை எளிதாக சிகிச்சையின் மூலம் குணப்படுத்தமுடியும்.
சில நேரங்களில் மலக்குடல் வழியே கழிவு வெளியேறுவதை மலக்குடல் புற்றுநோய் தடுத்துவிடும். இதன் காரணமாக அடைப்பு ஏற்படும். இது தீவிரமான வயிற்று வலி, மலச்சிக்கல், உடல் நலக் கோளாறுகளை கொண்டுவரும். இது போன்ற சூழல்களில் நீங்கள் உடனடியாக அருகில் உள்ள அவசரகால சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டும் அல்லது உங்கள் மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை செய்ய வே ண்டிய தேவை இருக்கிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.