பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி.ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்ட ஜனனி அங்குள்ள பிரபல சேனலில் தொகுப்பாளராகபணியாற்றி வந்தவர்.இவருக்கு லாஸ்லியா போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவே உடனே ஓகே சொல்லி நிகழ்ச்சியில் களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஜனனி தனது முழு விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி.வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.அந்தளவுக்கு ஜனனிக்கு ரசிகர்கள் படை உள்ளது.இறுதி வரை வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார்.இது ஜனனியின் தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.தற்போது இவர் தொடர்ந்து போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவரின் புகைப்படத்தினை காணவே ஜனனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது ஜனனி செம்ம கியூட்டாக மணப்பெண் கோலத்தில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் ஜனனியின் இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.