தமிழ் சினிமாவின் பிரபல நடன கலைஞர் மற்றும் நடிகராக இருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2வில் நடித்து வருகிறார். இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஆரம்பத்தில் ராகவா லாரன்ஸ், நடிகர் சூப்பர் சுப்பராயனின் உதவியாளராக வேலை செய்துள்ளார். இவர் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டதால் வேலை முடிந்தவுடன் நடன பயிற்சியில் ஈடுபடுவாராம்.
இதை பார்த்த பட இயக்குனர் ஒருவர் ராகவா லாரன்ஸ் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூறியுள்ளார். அதன் பிறகு ஒருநாள் ராகவா லாரன்ஸ் ரஜினி முன்பு நடனமாடிக் காட்டினாராம். அப்போது அவரது நடனம் பிடித்துபோய் நடன சங்கத்தில் சேர்த்துள்ளாராம். இதற்கான மொத்த செலவையும் ரஜினியே பார்த்து கொண்டாராம்இதையடுத்து தான் ராகவா லாரன்ஸ் பெரிய நடிகராக மாறினார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.