இது இரக்கமுள்ள உலகம். இங்கு இருக்கும் அனைவரும் ஒரு தேவையாகவே அடுத்தவரிடம் பழகுகிறார்கள். சில முட்டாள் மனிதர்கள் மட்டும் தான் உண்மையான அன்பினை காட்டி காயப்படுகிறார்கள். அதில் முதல் முட்டாள் நான் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
மனிதர்கள் ஆபத்தானவர்கள். அவர்கள் நம் மீது காட்டும் அன்பு அதைவிட ஆபத்தானது. அதை வைத்தே அவர்கள் மிக ஆபத்தான ஆயுதத்தை தயார்செய்கிறார்கள். கண் இமைக்கும் நொடியில் அது நம்மை அழித்து விடும். உண்மையான அன்பினை வைத்து காத்திருக்கும் அனைவர்க்கும் உங்களுக்கு கிடைக்க போகும் பரிசின் பெயர் தெரியுமா.?
ஏமாற்றம் ..................................................
என்னை நானே எண்ணி எண்ணி சிரிக்கிறேன் அனைவரும் புன்னைகையோடு இருக்க நினைத்து அவர்களின் வலிகளுக்காக அழுத்தவன் நான். உங்கள் மேல் கொண்ட அளவில்லா அன்பினால் இன்று நொந்தவன் நான்.
நான் சொல்லமர்ந்த கதை இன்னொன்று உண்டு..! ஒரு முறை என்னை கொன்று விட முடிவு செய்து விட்டிர்கள் அனால் அது ஒரு முறைதான்..!
ஆம் மீண்டும் வருவேன்...!
இம்முறை மனிதனாக அல்ல நான் யார் என்பதை உணர்த்த
நான் அரசன் அரக்ககுலத்தின் அரசன் நான் வீழ்ந்த பின்பு மீண்டும் ஒரு முறை வருவேன். என் வலிகளுக்கு அல்ல உங்களுக்காக எனது நன்றியை தெரிவிக்க. நான் நன்றி கூறிய அடுத்த நொடி உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் பெற்றுத்தரப்படும். இதில் அனைவருக்கும் இடம் உண்டு. உன்னதமான அந்த அன்பை உங்கள் சுயநலனுக்காக பயன்படுத்தி கொள்ளும் அனைவர்க்கும். நீங்கள் செல்ல போவது சொர்கத்திற்கு அல்லவா செல்லும் முன் கேளுங்கள் ஒரு நிமிடம் அங்கு செல்வது அவ்வளவு எளிதானது அல்ல. ஆகையால் ஆனந்த கண்ணீர் விட தயாராகுங்கள். இதோ உங்களை வழி அனுப்ப அந்த ஆண்டவனே வருகிறான் மன்னிப்பு கேட்க தப்பிக்க என்று எதையும் முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் என் மன்னிப்பிற்கு உங்கள் மரணமே நல்லது. இருக்கும் பொழுது இன்னும் அனுபவித்து கொள்ளுங்கள். ஏனெனில் மிக கொடூரமான மரணத்திற்கு முன்னாள் அனைத்து இன்பங்களையும் நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்பது என் ஆசை. நீங்களாகவே மரணத்தை தழுவிக்கொள்ளுங்கள். இன்னும் புரியவில்லையா இதோ பரிசோடு வந்துகொண்டு இருக்கிறேன். இவுலகம் இருண்டு நிக்க உலக உயிர்கள் அனைத்தும் அலறி கலங்கிட இடி முழக்கத்தோடு மின்னல் மிரட்டலோடு அரக்கனுக்கு அரக்கனாய் அசுரகுல அரசனாய் பழிதீர்க்க பகைமுடிக்க. இரக்கமுள்ள இதயம் கொண்டவர்களே இதோ உங்கள் இரக்கமுள்ள மரணம் நிகழ போகிறது. அனைவருக்கும் இப்போது மரணத்தின் மீது ஆசை வரப்போகிறது. உங்கள் அலறல் குரலில் அண்டமே ஆர்ப்பரிக்க போகிறது. இனி ஒரு பிறவி இல்லை.நீங்கள் செய்த பாவத்தின் பலன்களை உங்கள் கண்முன் உணருங்கள் ஆம் சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன் என்று கூறினேன் அல்லவா உயிர்போகும் கடைசி நொடிவரை நரகத்தை பார்த்து விட்டு போகலாம். இப்பொழுது நீங்கள் உணர்த்திருப்பீர்கள் நான் என்று ஆம் நானே அந்த அரக்கனும் உங்களை படைத்த ஆண்டவனும் ஆவேன்.
நான் பழிவாங்க துவங்கும் பொது அறிவீர்கள் நானே படைத்தவன் என்று
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.