455 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இலங்கை
455 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இலங்கை

புதியவன்

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 455 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இதேவேளை, இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, 102 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பங்களாதேஷின் சட்டோகிராமில் இடம்பெற்று வரும் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 531 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 93 ஓட்டங்களையும் , கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களையும்,திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்களையும், அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுக்களையும், ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் ஜாகிர் ஹசன் அதிகபட்சமாக 54 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இலங்கை அணி 353 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 

இரண்டாவது இன்னிங்ஸில் 102 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்துள்ள இலங்கை அணி, ஏற்கனவே முன்னிலை பெற்ற 353 ஓட்டங்களுடன் சேர்த்து 455 ஓட்டங்களை இன்றைய நாள் ஆட்டநேர முடிவுவரை பெற்றுள்ளது. (க)

 

96 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.