நடிகை சிம்ரனுக்கு மோனல், ஜோதி ஆனந்த் இரண்டு தங்கைகள். சுமீத் நவல் என்ற ஒரு சகோதரர். இந்திர தனுஷ் என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மோனல்.
பார்வை ஒன்றே போதுமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி பதித்தார். தொடர்ந்து பத்ரில, லவ்லி, சமுத்திரம், சார்லி சாப்ளின், பேசாத கண்ணும் பேசுமே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு கோரியோகிராஃபர் பிரசன்னா சுஜித்தான் காரணம் என சிம்ரன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், மோனலின் நினைவு நாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சிம்ரன். அதில் என் அழகான சகோதரி மோனலின் அன்பான நினைவாக... நீ ஒருபோதும் மறக்கப்பட மாட்டாய் என குறிப்பி ட்டுள்ளார்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.