எதிர்வரும் நாட்களில் வானில், வெள்ளி, செவ்வாய்,வியாழன்,சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய வானியல் நிகழ்வை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் வானில் அவதானிக்கமுடியும் எனவும்
இந்த அரிய வானியல் நிகழ்வை, தொடர்ந்து 4 வாரங்களுக்கு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அவதானிக்க முடியும்.
அத்துடன் யுரேனஸ்,நெப்டியூன் தவிர்த்து ஏனைய கோள்களை தொலை நோக்கியின்றி வெறும் கண்களில் பார்வையிட முடியும் எனவும்
கிரகங்கள் சீரமைக்கப்படுவது மிகவும் அரிதான விடயமல்ல என்றாலும், நான்கு அல்லது ஐந்து பிரகாசமான கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்கும் வாய்ப்பு ஒவ்வொரு ஆண்டும் நிகழாத குறிப்பிடத்தக்க நிகழ்வு என்றும் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜனவரி 21 அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இரவு 8:30 மணி, கிரக அணிவகுப்பைக் காண சிறந்த நேரம் என கூறப்பட்டுள்ளதுடன்
உள்ளூர் வானிலை மற்றும் அப்பகுதியில் உள்ள ஒளி மாசுபாட்டின் அளவு போன்ற பல காரணிகளைப் பொறுத்து தெரிவுநிலை இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.