தமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.
இந்த நிலையில் நியூயார்க் நகரில் நடந்த மிகப்பெரிய பேஷன் ஷோ நிகழ்ச்சியான மெட் காலாவில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த வைர நெக்லசும், ஆடையும் பலரையும் கவர்ந்தது. குறிப்பாக அவர் அணிந்து வந்த நெக்லஸ் பற்றியே பலரும் பேசினார்கள். இது பல்கேரியாவை சேர்ந்த 11.6 கேரட் டைமண்ட் நெக்லஸ் வகை என்று கூறப்படுகிறது.
இந்த நெக்லசின் விலை இந்திய மதிப்பில் ரூ.204 கோடி என்றும் தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த பேஷன் ஷோவில் இந்தியாவில் இருந்து அலியாபட்டும் கலந்து கொண்டார். உலகிலேயே புகழ்பெற்ற பேஷன் ஷோ மெட் கலா என்பது குறிப்பிடத்தக்கது. பேஷன் உடைகளை காட்சிப்படுத்தும் இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரியங்கா சோப்ரா சிட்டாடல் ஹாலிவுட் வெப் தொடரில் நடித்து இருக்கிறார். இதில் நடிக்க அவர் கதாநாயகனுக்கு இணையான சம்பளத்தை பெற்றுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.