இலங்கைக் கடனுக்கு 2043 வரை அவகாசம்;
இலங்கைக் கடனுக்கு 2043 வரை அவகாசம்;

விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள் இளதாகச் சொல்லப்படும் நிலையில், கடன்களை மீளச் செலுத்துவதற்காக இலங்கைக்கு 2043ஆம் ஆண்டுவரை அவகாசங்கள் கிடைக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஜப்பானின் தலைமையில் இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றன. சீனா பார்வையாளராகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பணிகள் கடந்த சிலவாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், இதில் இறுதி உடன்பாடொன்று எட்டப்படுவதில் சிரமம் நிலவியது. சீனா சம்மதத்தைத் தெரிவிக்காதமையும் கடன் மறுசீரமைப்புப் பணிகள் தாமதமானமைக்கு பிரதான காரணங்களில் ஒன்றாகும். இந்த நிலையில், கடன் சீரமைப்பில் பொதுவான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இதன்படி 2028ஆம் ஆண்டுவரை இலங்கை கடன் களையோ அவற்றுக்கான வட்டிகளையோ செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது. 2028ஆம் ஆண்டின் பின்னரான 15 வருடங்களில் அதாவது 2043ஆம் ஆண்டுவரை இலங்கைக்கு அவகாசம் வழங்க பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

65 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.