நாய்களைக் கொண்டு நடத்தப்படும் Greyhound பந்தயத்தை ரத்து செய்வதற்கு நியுசிலாந்து தீர்மானித்துள்ளது. இந்த பந்தயத்தின் போது ஏற்படும் காயங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
அந்நாட்டில் இந்த பந்தயம் தொடர்பில் நீண்ட நாட்களாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாய்களை முறையற்ற வகையில் நடத்துவது மற்றும் அவற்றுக்கு ஊக்கமருந்து வழங்குவற்கு சில நாய் வளர்ப்பாளர்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பந்தயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் வேறு தொழில்களுக்கு செல்வதற்கு காலம் வழங்கும் வகையில் எதிர்வரும் 20 மாதங்களில் இது தொடர்பான நிறுவனங்களை மூடுவதற்கு நியுசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வர்த்தக ரீதியிலான பசநலாழரனெ பந்தயம் நியுசிலாந்தையடுத்து அவுஸ்திரேலிய, அயர்லாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.