சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping)அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (16) காலை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “Invest in Sri lanka-round table meeting 2025” முதலீட்டு அமர்வில் கலந்து கொண்டார்.
சீனா டியான்யிங் இன்கோபரேசன் (CNTY- China Tianying Inc),சீன ஹார்பர் பொறியியல் நிறுவனம் ( China Harbour Engineering Company Ltd) , சீன தொலைத் தொடர்பு நிர்மாண கம்பெனி லிமிடெட் (China Communications Construction Company Ltd), சீனா பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம் ( China Petrochemical Corporation -SINOPEC Group),மெடலர்ஜிகல் கோபரேசன் ஒப் சைனா நிறுவனம் (Metallurgical Corporation of China Ltd), சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனம் ( China Civil Engineering Construction Corporation),சீனா எனர்ஜி இன்டர்நெசனல் குழும நிறுவனம் (China Energy International Group Company Ltd),குவாங்சு பொதுப் போக்குவரத்து குழுமம்( The Guangzhou Public Transport Group)உட்பட பல முன்னணி சீன நிறுவனங்கள் இந்த முதலீட்டு அமர்வில் பங்கேற்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.