பிரபல இந்திய தொழிலதிபரும், TATA சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் TATA உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழில்துறையைத் தாண்டி பல்வேறுபட்ட மனிதாபிமான மாற்று சமூக பணிகளில் ஈடுபட்டுவந்த ரத்தன் TATAவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மராட்டி முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘X’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“ஒரு அரிய இரத்தினத்தை இழந்துவிட்டோம். அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கு ரத்தன் TATA எப்போதும் முன்மாதிரியாக இருப்பார்.
ரத்தன் TATA கடந்த 1991இல், TATA குழுமத்தின் தலைவரானார். அவரது பதவிக் காலத்தில், TATA குழுமம் கணிசமாக விரிவடைந்தது. மேலும் பல்வேறு தொழில்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். அவரது முடிவுகளும், துணிச்சலான அணுகுமுறையும், சமூக அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவில் நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.