இந்த வருடம் கல்வியற் கல்லூரி மாணவர்களை இணையவழி ஊடாக ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வியற் கல்லூரி மாணவர்களை ஆட்சேர்ப்பதற்காக இதற்கு முன்னர் 13.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இம்முறை அதற்காக 3.5 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டது.
இதனால் அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். இம்முறை 04 மாதங்களில் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சேர்ப்பை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடிந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபரின் அனுமதியுடன் இந்த பணிக்கான முழு தொழில்நுட்ப ஆதரவையும் information institute of Technology வழங்கியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.