பொதுவாக பெண்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை வீட்டை சுத்தப்படுத்துவதில், அழகுபடுத்துவதிலும் தான் செலவிடுகின்றனர். வெளியில் இருந்து ஒருவர் வீட்டிற்குள் நுழையும், நமது வீட்டின் பிரதிபலிப்பு தான், நாம் எந்த அளவுக்கு சுத்தமானவர்கள், நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை காண்பிக்கும்.
தற்போது இந்த பதிவில் நாம் நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள, அழகுபடுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையற்ற பொருட்களை அகற்றவும்
நாம் நமது வீடுகளில் தேவைக்காக பல பொருட்களை வாங்குவதுண்டு. அதே சமயம் சிலர் தேவையில்லை என்றாலும், ஆசைக்காக சில பொருட்களை வாங்குவதுண்டு. அப்படி வாங்கும் பொருட்கள் நமக்கு தேவைப்படவில்லை என்றாலும், வீட்டில் உள்ள இடத்தை தான் அடைத்துக் கொண்டிருக்கும்.
எனவே நாம் பொருட்களை வாங்கும் போது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி உபயோகப்படுத்த தான் உகந்தது. நாம் ஆசைக்காக பொருளை வாங்கும் போது அது வீட்டில் உள்ள இடத்தை தான் அடைத்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட பொருள்களால் வீடு அழகிழந்த நிலையிலும் காணப்படும்.
நிறத்தை தேர்வு செய்யுங்கள்
பொதுவாக நம் ஒவ்வொருவருக்கும், ஒரு நிறம் அதிகமாக பிடித்திருக்கும். உதாரணமாக உங்களுக்கு சிவப்பு கலர் பிடிக்கும் என்றால், நீங்கள் வீட்டிற்கு வாங்க கூடிய பொருட்கள் அனைத்தையுமே சிவப்பு நிறத்தில் வாங்கினால். அது வீட்டை மேலும் அழகுபடுத்தும்.
அப்படி சிவப்பு நிறத்தில் வாங்கும் போது, வீடே தனி அழகாக தெரிவதோடு, நமது மனதும் குளிர்ச்சியாக காணப்படும். இப்படி சூழலில் வீடு இருக்கும் போது, நாம் வெளியில் எங்கு சென்றாலும், எப்போது வீட்டுக்கு போவோம் என்ற எண்ணம் வரும். ஏனென்றால், இந்த சூழல் நமக்கு மன அமைதியையும், சந்தோஷத்தையும் அளிக்கும்.
வண்ணம் தீட்டுதல்
நமது வீடுகளில் பெயிண்ட் அடிக்கும் போது, நமக்கு பிடித்த நிறத்தில் பெயிண்ட் அடிப்பது வழக்கம். அதே சமயத்தில் சுவரில், நமக்கு பிடித்தமான ஓவியங்கள் வரையலாம். அதே போல் சுவரில் ஒட்டக்கூடிய ஸ்டிக்கர்கள் போன்றவற்றை உங்களுக்கு பிடித்த வண்ணம் ஒட்டிக் கொள்ளலாம். மேலும், வீட்டை மேலும் அழகுபடுத்த வண்ண விளக்குகளை பயன்படுத்தலாம்.
நேரத்தை ஒதுக்க வேண்டும்
இல்லத்தரசிகளே பொறுத்தவரை வீட்டில் ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள். அதே சமயம் வீட்டை சுத்தப்படுத்துவதற்கும், அழகுபடுத்துவதற்கும் என்று தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டும். இந்த வேலைகளை வெறுப்போடு செய்யாமல் விருப்பத்தோடு செய்ய வேண்டும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.