எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இரண்டாவது போட்டி இன்று
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இரண்டாவது போட்டி இன்று

புகழேந்தி 

இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (11) இடம்பெறவுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக இது இடம்பெறவுள்ளது.

இப்போட்டி பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்களே இன்றைய போட்டியிலும் பங்கேற்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலமும் பெத்தும் நிஸ்ஸங்கவின் இரட்டைச் சதத்தின் மூலமும் இன்றைய போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். 

இரு அணிகளுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் நிஸ்ஸங்க 210 ஓட்டங்களைக் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேவேளை, அவிஷ்க பெர்னாண்டோ 88 ஓட்டங்கள் சேர்த்து இலங்கை அணிக்கு நல்ல தொடக்கத்தை உருவாக்கினார். 

ஆப்கான் அணியைப் பொருத்த மட்டில் மொஹமட் நபி 136 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 149 ஓட்டங்களைக் குவித்தார். 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 382 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்த நிலையில் ஆப்கான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெறியேறியபோது நபியும் ஓமர்சாயும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி அந்த அணி 339 ஓட்டங்களைப் பெற உதவினர். 

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாகச் செயற்பட்ட போதும் பந்து வீச்சாளர்களில் பிரமோத் மதுஷன் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியது ஆறுதல் அளித்தது. அவரும் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசிய போதும் பின்னர் ஓட்டங்களை அதிகமாக விட்டுக்கொடுத்து விட்டார். 

ஒரு கட்டத்தில் 50 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய ஆப்கான் அணி திடீரென எழுச்சி பெற்று வெற்றியிலக்கை நோக்கி வேகமாக பயணித்தது.  

மொஹமட் நபி ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் இலங்கை அணியின் வெற்றி கேள்விக்குறியாகியிருக்கும். 

ஆப்கான் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பியது போன்று இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களும் சொதப்பிவிட்டனர் என்றே கூற வேண்டும். அதேவேளை, ஆப்கான் அணியின் பந்து வீச்சாளர்களும் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததோடு விக்கெட்டுக்களையும் வீழ்த்தத் தவறிவிட்டனர்.

இரு அணியிலும் பலமும் பலவீனமும் உள்ளதால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. (க) 

121 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.