கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 15 குடுப்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று மதியம் பெறப்பட்ட புள்ளிவிபரத் தகவல்களில் குறித்த விடயம் தொடர்பில் பதிவாகியுள்ளது.
மேலும் இவர்களில் பத்து குடும்பங்களைச் சேர்ந்த 35பேர் உறவினர் வீடுகளில் இடம்பெயர்ந்துள்ளதுடன் ஐந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து வரும் சீரற்றகாலநிலையினால் வட்டக்கச்சி பகுதியில் கால்வாயுடனான மதகு ஒன்றும் சேதமடைந்துள்ளது.
குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.